kavithi3

   
கால சக்கரம்
கடையாணி இல்லாமல்
கடக‌டவென சுற்றி
அரும்புமீசை எட்டிபார்த்த‌
அழகான நாட்கள்...
அது என்னவோ தெரியவில்லை
அடித்து விளையாடும்
அடுத்த வீதீ தோழிமீது
வகையறியா நேசம்
திருட்டுதனங்கள் தித்தித்தது
திட்டும் வார்த்தைகள் பிடித்தது
காரணங்கள் தேட கிடைக்கவில்லை
குற்றத்தை சொல்லிவிட்டேன்
காத்திருந்தேன் தீர்ப்புக்கு
நெஞ்சம் என்னும் நீதிமன்றத்தில்
நிறுத்தப்பட்டேன் குற்றவாளியாய்
அவளே வாதிட்டாள்
அவளே சாட்சியானாள்
அவளே நீதிகூறினாள்
வெட்கங்கள் தீர்ப்பெழுத்த
கண்கள் விலங்கிட்டன
நிபந்தனை இல்லாமல்
நிறைவு இல்லாமல்
சிறைபடுத்தபட்டேன்...
நீதிமன்றத்திலேயே..........      

Comments